நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ.

உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார்.

தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். பல துணுக்குகளைச் சேகரித்தார்.

அவற்றை அழகாக ஒருங்கிணைத்தார் என்று பிதாகோரசை வியந்தோதும் ஓஷோ, தனக்கே உரிய முறையில் பிதாகோரசின் சிந்தனைகளை ஆய்வு செய்கிறார்! இது ஒரு தத்துவஞானப் பொக்கிஷம்!

– எஸ்.குரு.

நன்றி: தினமலர், 18/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *