உஷாதீபன் குறுநாவல்கள்
உஷாதீபன் குறுநாவல்கள், நிவேதிதா பதிப்பகம், விலை 250ரூ.
சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷா தீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்சசியாக எழுதி வருபவர் இவர்.
இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும், அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே… ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட தலைப்புகள் சற்றே நெருடல்.
நன்றி: தி இந்து, 1/7/2017.