சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி, கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி, செம்மொழிக்கழகம், விலை 70ரூ.

முதல் படத்திலேயே (“பராசக்தி”) புகழின் சிகரத்துக்குச் சென்றவர் சிவாஜிகணேசன். “வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில், கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டியவர். அந்த நடிப்பு அவருக்கு ஆசியா – ஆப்பிரிக்கா நாடுகளின் தலைசிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுத் தந்தது.

கலைத்தாயின் தலைமகன் என்று அவனைவராலும் போற்றப்ட்ட சிவாஜிகணேசனைப் பற்றி, உணர்ச்சி மயமான பாடல்களை எழுதியுள்ளார், கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி. நல்ல தமிழில், அதே சமயம் எல்லோரும் புரிந்து ரசிக்கும் விதத்தில் கவிதைகள் அமைந்துள்ளன.

நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *