சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ.

ஆறடுக்கு முறைப் பதிப்பு

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது.

சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள முழுப்பாட்டு இடம் பெறுகிறது. பிறகு பாட்டின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதை அனைவருக்கும் புரியும்படி உரைப்பாட்டாக மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து அதற்கு பொழிப்புரை, அருஞ்சொற்பொருள், விளக்கம் என ஆறடுக்கு முறையில் அழகிய வகையில் உரை எழுதப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *