வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ.

திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு.

புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வீரமணி என்று பெயர் மாற்றப்பட்டது.

பெரியாரை முதன் முதலாக சந்தித்தபோது, வீரமணிக்கு வயது 11. அந்த வயதிலேயே மாநாட்டு மேடையில் ஏறி, சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருந்தார். வீரமணியின் இள வயது பேச்சைக்கேட்டு, அறிஞர் அண்ணாவே அதிசயித்தார். வீரமணியின் பால்ய நண்பர் எழுத்தாளர் ஜெயகாந்தன். இப்படி அரிய தகவல்கள் முத்துக்கள் போல பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடுகின்றன.

நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *