சந்தோசம்
சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ.
கலை பேசும் சந்தோசம்
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம்.
எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 3/1/2018.