சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை (பாகம்-2)

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை (பாகம்-2), மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், பக்.504, விலை ரூ.399. நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக அனுபவங்கள் மற்றும் அரசியல் அனுபவங்களைப் பேசும் விரிவான நூல் இது. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த 60 கட்டுரைகள் நூலாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுடன் அரை நூற்றாண்டு தமிழக அரசியல்-கலையுலக வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் வகுத்த வியூகம், சிவாஜியின் தேர்தல் பிரச்சாரங்கள், காமராஜர், ம.பொ.சி., சின்ன அண்ணாமலை போன்ற தலைவர்களுடன் சிவாஜிக்கு இருந்த நட்பு, […]

Read more

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை, பந்தள பதிப்பகம், பக். 440, விலை 399ரூ. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமான புத்தகம் இது. சிவாஜி நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்லாது, அவருடைய அரசியல் வாழ்க்கைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர் நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா. இதுவரை வெளிவராத பல அரிய தகவல்களை அறிய முடிகிறது. அத்துடன் சிவாஜியின் பெரிய படங்கள், சிறிய படங்கள், பிரபலங்களுடன் இருக்கும் படங்கள், அபூர்வ படங்கள்… இப்படி பக்கத்துக்குப் பக்கம் ஏராளமான படங்கள். […]

Read more

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை, மு.ஞா.செ. இன்பா, பந்தள பதிப்பகம், பக். 412, விலை 400ரூ. திரைப்பட ரசிகர்களால் “நடிகர் திலகம்‘’ என்று பாராட்டப்பட்ட சிவாஜி கணேசனைப் பற்றி வெளிவந்திருக்கும் மற்றொரு நூல். சிவாஜியின் இயற்பெயர் கணேசமூர்த்தி என்பதில் தொடங்கி, திருச்சியில் கம்பளக்கூத்துக்காரர்கள் நடத்திய “கட்டபொம்மன்’‘ நாடகத்தில் சிறுவன் சிவாஜி வெள்ளைக்கார சிப்பாயாக நடித்தது (முதல் நாடக வேடம்), அடுத்து யதார்த்தம் பொன்னுசாமியின் மதுரை பாலகான சபாவில் சேர்ந்து ராமாயண நாடகத்தில் சீதை வேடம் ஏற்றது, ஒரே நாடகத்தில்(“இழந்த காதல்’‘) சிவாஜியும், எம்.ஆர். ராதாவும் […]

Read more