கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை
கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை, பந்தள பதிப்பகம், பக். 440, விலை 399ரூ.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமான புத்தகம் இது. சிவாஜி நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்லாது, அவருடைய அரசியல் வாழ்க்கைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர் நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா.
இதுவரை வெளிவராத பல அரிய தகவல்களை அறிய முடிகிறது. அத்துடன் சிவாஜியின் பெரிய படங்கள், சிறிய படங்கள், பிரபலங்களுடன் இருக்கும் படங்கள், அபூர்வ படங்கள்… இப்படி பக்கத்துக்குப் பக்கம் ஏராளமான படங்கள்.
அச்சும், கட்டமைப்பும் வெகு சிறப்பு. சிவாஜி ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் கவரக்கூடிய சிறந்த புத்தகம். பெரிய அளவில் 440 பக்கங்கள். விலை 399ரூ.
நன்றி: தினத்தந்தி, 19/4/2017.