கதை திரைக்கதை இயக்கம்
கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ.
சினிமா துறையில் ஈடுபட நினைப்பவர்கள் பல லட்சம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டுகிறது. சினிமாவுக்கு கதை எழுதுவது, கடினமான வேலை அல்ல. ஆனால் திரைக்கதை எழுதுவதும், இயக்குவதும் கடினமான வேலைகள். கதை, திரைக்கதை, இயக்கம் பற்றி முழு விவரங்களையும் தருகிறார் கலைச்செல்வன்.
நாடகங்கள் நடத்துவதில் அனுபவம் பெற்ற இவர், திரைப்படத் துறையில் துணை டைரக்டராகவும், கதை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய அனுபவ முதிர்ச்சி, எழுத்தில் பிரதிபலிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு சினிமாப் படம் தயாரிக்க என்னென்ன தெரியவேண்டுமோ அவ்வளவு விஷயங்களையும் இந்த நூலில் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறார். சினிமா துறையில் நுழைய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026651.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 21/2/2018.