படத்தொகுப்பு கலையும் அழகியலும்

படத்தொகுப்பு கலையும் அழகியலும், ஜீவா பொன்னுசாமி, நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ. எடிட்டிங் ஒரு அற்புதக் கலை. எடிட்டிங் பற்றிய அருமையான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது! ‘படத் தொகுப்பு என்பது, விதிகள் என்பது தகர்க்கப்படுபவையாகவும், தளர்த்தப்படுபவையாகவும் இருக்கின்றன. காரணம், அது பார்வையாளனின் உளவியலோடு சார்ந்த ரசனை தொடர்புடையதே’ என்று நுாலாசிரியர் கூறுகிறார். எடிட்டிங் கலை தான் சினிமாவுக்கே அடிப்படை என்பதை சொன்னவர்கள் ரஷ்யர்கள்: குலசேவ், செர்ஜி ஐசென்ஸ்டின், புத்தோவ்கின், ஜிகா வேர்ட்டோவ்… படத் தொகுப்பு அறிமுகம், அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள், […]

Read more

கதை திரைக்கதை இயக்கம்

கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ. சினிமா துறையில் ஈடுபட நினைப்பவர்கள் பல லட்சம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டுகிறது. சினிமாவுக்கு கதை எழுதுவது, கடினமான வேலை அல்ல. ஆனால் திரைக்கதை எழுதுவதும், இயக்குவதும் கடினமான வேலைகள். கதை, திரைக்கதை, இயக்கம் பற்றி முழு விவரங்களையும் தருகிறார் கலைச்செல்வன். நாடகங்கள் நடத்துவதில் அனுபவம் பெற்ற இவர், திரைப்படத் துறையில் துணை டைரக்டராகவும், கதை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய அனுபவ முதிர்ச்சி, எழுத்தில் பிரதிபலிக்கிறது. சுருக்கமாகச் […]

Read more