படத்தொகுப்பு கலையும் அழகியலும்
படத்தொகுப்பு கலையும் அழகியலும், ஜீவா பொன்னுசாமி, நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ.
எடிட்டிங் ஒரு அற்புதக் கலை. எடிட்டிங் பற்றிய அருமையான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது!
‘படத் தொகுப்பு என்பது, விதிகள் என்பது தகர்க்கப்படுபவையாகவும், தளர்த்தப்படுபவையாகவும் இருக்கின்றன. காரணம், அது பார்வையாளனின்
உளவியலோடு சார்ந்த ரசனை தொடர்புடையதே’ என்று நுாலாசிரியர் கூறுகிறார்.
எடிட்டிங் கலை தான் சினிமாவுக்கே அடிப்படை என்பதை சொன்னவர்கள் ரஷ்யர்கள்: குலசேவ், செர்ஜி ஐசென்ஸ்டின், புத்தோவ்கின், ஜிகா வேர்ட்டோவ்…
படத் தொகுப்பு அறிமுகம், அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள், படத் தொகுப்பின் விதிகள், காட்சிகளின் கோர்வை போன்ற அத்தியாயங்கள் பயனுள்ளவை…
எப்படி படத் தொகுப்பு நிகழ்கிறது? என்ற கட்டுரையில், ‘இரண்டே இரண்டு முறை தான் உள்ளது. LINEAR மற்றும் NON LINEAR முறை. LINEAR EDITING என்பது திரைப்படத்தில், படச்சுருளில் செய்வது, தொலைக்காட்சியில் TAPE–ல் செய்வது. NON LINEAR EDITING என்பது, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் மென்பொருட்களை பயன்படுத்தி செய்வது’ என, விளக்குகிறார்.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, படங்களைத் தொகுப்பதில் ஏற்படுத்திய மாறுதல்களையும், இந்தக் கலை ஒரு விரிவாக ஆய்வு செய்கிறது. உலகளாவிய சினிமா இயக்குனர்கள் மற்றும் எடிட்டர்களின் எடிட்டிங் சார்ந்த எண்ணங்களையும் முன் வைக்கிறது.
திரைத் தொகுப்பு கலைப் பொக்கிஷம்.
– எஸ்.குரு
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027772.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818