108 திவ்ய தேசங்கள்
108 திவ்ய தேசங்கள், ஆர்.இளைய பெருமாள், சகுந்தலை நிலையம், பக். 414, விலை 300ரூ.
பன்னிரெண்டு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவை, 108 திவ்ய தேசங்கள். 4,000 திவ்ய பிரபந்தங்களால் இந்த வைணவ கோவில்கள் போற்றப்பட்டுள்ளன.
இந்த நுாலில் சோழ நாட்டுத் திருப்பதிகள், 40; நடுநாட்டில் – 2, தொண்டை நாட்டில் – 22, வடநாட்டில் – 11, மலைநாட்டில் – 13, பாண்டி நாட்டில் – 18, திருநாட்டில் – 2 என்று பட்டியலிட்டு கோவில்கள் விளக்கப்பட்டுள்ளன.
இதில், கோவில் என்று வைணவம் போற்றும் திருவரங்கம் முதல் கோபுரம், 236 அடி உயரம். அரங்கனுடன் இங்கு ஐக்கியம் ஆனவர் ஆண்டாள். ராமானுஜர், தர்மவர்மன் மகள் உறையூர் மகள் சுல்தானி என்னும் ‘துலுக்க நாச்சியார்’ என இந்தத் தகவல்கள் படிப்பவரை பரவசப்படுத்துகிறது.
கோவில் பெருமாள் உற்சவ மூர்த்தி வண்ணப் படங்கள் கண்ணை ஈர்க்கின்றன. உள்ளங்கையில் அடங்கிய திவ்ய தேசங்கள் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்
நன்றி:தினமலர், 20/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818