மார்க்ஸ் பிறந்தார்
மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ், தமிழில் நா.தர்மராஜன், அலைகள் வெளியீடு, விலை 160ரூ

ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது.
மார்க்ஸியத்தை வறட்டுக் கோட்பாடாக அல்லாமல், அவருடைய காலப் பின்னணியிலிருந்து எப்படி அது கொள்கையாக உருவெடுத்தது என்பதை இந்த நூல் மூலம் அறியலாம். மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் பற்றி அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய அவசியமான படைப்பு.
– ஆதி வள்ளியப்பன்,
நன்றி: தி இந்து, 5/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026675.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818