பழைய யானைக் கடை
பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை), இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195.
சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது.
‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் பாடல்கள் மிகமிகக் குறைவு. என்றாலும், அகப் பாடல்களைப் பாடிய மிளைப்பெருங்கந்தன், வெள்ளிவீதியார், பெருங்கடுங்கோ, கருவூர் ஓதஞானி, மதுரைக் கண்ணனார் முதலியோர் பாடல்களில் உள்ள நகைச்சுவை ரசிக்கத்தக்கவை.
புறப்பாடல்களில் ஆவூர் மூலங்கிழார், முடமோசியார், மோசிகீரனார், ஒளவையார், கபிலர் போன்றோர் பாடிய நகைச்சுவைப் பாடல்களும் அத்தகையதே.
கம்பராமாயணத்திலிருந்து 50 பாடல்கள்; மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், குலசேகராழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் எழுதிய பாடல்கள்; மணிமேகலை, சீவகசிந்தாமணி காப்பியங்கள், திருக்குறள், நாலடியார், மூதுரை, நீதிநெறி விளக்கம் முதலிய நீதிநெறி நூல்களில் உள்ள பாடல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
மகாகவி பாரதியாரின் ‘ஸங்கீத விசயம்‘, ‘சின்ன சங்கரன் கதை‘, ‘குயில் பாட்டு ‘ முதலியவற்றில் உள்ள நகைச்சுவை ரசிக்கும்படியாக உள்ளன. சமகால கவிதைகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள பதின்மூன்று கட்டுரைகளும் நகைச்சுவையுடன் கூடிய இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்திய சிறந்த திறனாய்வு.
நன்றி: தினமணி, 4/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026336.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818