பழைய யானைக் கடை

பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை),  இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195. சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது. ‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் […]

Read more

லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை,  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 100ரூ. சில்லென்று ஒரு தொகுப்பு! பாரதியின் கவிதைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றைக் கொண்ட இந்த கட்டுரைத் தொகுப்புக்கு நடிகர் வடிவேலுவைப் பற்றிய சின்னகட்டுரை ஒன்றின் தலைப்பை வைத்திருக்கிறார் கவிஞர் இசை. ஒரு வினோதமான ஆசை இது என்று முன்னுரையில் குறிப்பிடும்போதே இசை இந்த கட்டுரைத் தொகுப்பு எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறார். பெருமாள் முருகன் கவிதைகளுடனான பயணம், திருடன் மணியன் பிள்ளை புத்தகம் பற்றிய கட்டுரை, ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரை, க.மோகனரங்கனின் […]

Read more

வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more