வர்ணசாகரம்
வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ.
வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் பலர் இயற்றிய வர்ணங்கள், ஏழு தரு வர்ணங்கள், 89 பத வர்ணங்கள் மற்றும் சவுகவர்கணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்தவர் சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்தராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் பலர் இயற்றிய வர்ணங்கள், இந்த நூலில் ஒரு சேரக் கிடைக்கின்றன. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட இசைவாணர்கள் இயற்றிய வர்ணங்கள், தெளிவான சுர, தாளக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் முகவுரை பக்கங்களில், இந்த வர்ணங்களை இயற்றிய இசைவாணர்களின் காலம் மற்றும் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டு உள்ளிட்ட செய்திகளை, தொகுப்பாசிரியர், பட்டியலிட்டுள்ளார். பல்வேறு ராகங்களிலும் தாளங்களிலும் அமைந்துள்ள இந்த வர்ணங்களின் தொகுப்பு, இசைக் கலைஞர்களுக்கும் இசை பயிலும் மாணவர்களும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. -டேககரல .சபஸ்ரீ ஹரி நன்றி: தினமலர், 21/12/2014.
—-
தாய்க்கு ஒரு தண்டனை, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 70ரூ.
எழுத்தாளர் அய்யாக்கண்ணு எழுதியிருக்கும் சிறுகதைகளில் சிறந்த 21 கதைகளை தேர்ந்தெடுத்து இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்புக்கேற்றபடி அமைந்த முதல் கதையே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது. அதுபோல் ஒவ்வொரு கதையும் இறுதிவரை யூகிக்க முடியாதபடி திருப்பங்களுடன் பயணிப்பது படிக்கும் ஆவலை அதிகரிக்கிறது. கதையுடன் மனதை ஒன்றே செய்யும் வகையில் சுவைபட எழுதியிருக்கும் ஆசிரியரின் யுக்தி பாராட்டுதலுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.