நமது பாரம்பரிய இசை
நமது பாரம்பரிய இசை, தொகுப்பாசிரியர்-சித்தார்த்தன், பண்மொழிப் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ.
இந்த நூல் கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆராகண, அவரோகண வரிசைகளும் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்க இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய இசை என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் ஆண்டு கால இசையின் வரலாற்றை சுருங்கச் சொல்கிறது. அது தகவலாக மட்டுமல்லாமல், ஆய்வாகவும் அமைந்துள்ளது. தமிழிசை இயக்கம் தோன்றிய பின்னணி, வரலற்று ரீதியில் பல நூற்றாண்டுகளாக இலக்கியம், இசை போன்றவற்றில் வடபகுதி, தென்பகுதி மக்களிடையே தொடர்ந்து நடந்த பல பரிமாற்றங்கள் அதனால், இசையில் பொதுத்தன்மை உருவாகிறது ஆகியவற்றையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள், ஆய்வு மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். -அ.ப.இராசா. நன்றி: தினமலர், 21/12/2014.
—-
அகம் புறம் 64, கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 250ரூ. இந்நூலில் சிறந்த மருத்துவத்தில் அக மருந்துகள் 32வகையும், புற மருந்துகள் 32 வகையும் பற்றிய செயல்முறை விளக்கம் படங்களுடன் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நடையில் விளக்கியுள்ளார் மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ். சித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 24/12/2014.