மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ், தமிழில் நா.தர்மராஜன், அலைகள் வெளியீடு, விலை 160ரூ ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது. […]

Read more

மஞ்சள் பிசாசு

மஞ்சள் பிசாசு,  தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு,  அ.வி.அனிக்கின், தமிழில்: நா.தர்மராஜன், அடையாளம், பக்.328, விலை ரூ.270. ரஷ்யமொழியில் 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பு இந்நூல். 1980 – 1982 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. அப்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக, மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்தது, உலக அளவில் உற்பத்தியும், தொழில் முதலீடும் குறைந்தது தங்கத்தின் விலை குறைய இதுவே காரணமாகியது. வெறும் உலோகம் என்ற நிலையைத் தாண்டி, உலக முழுவதும் உள்ள பொருளாதார […]

Read more