திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3)

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3), கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ.

திரைப்பட பாடலாசிரியர் மதுர பாஸ்கரதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை 100 பாடலாசிரியர்களையும், அவர்களின் படைப்புகளையும் முதல் தொகுதியில் ஆவணப்படுத்தி, 1963-1981 காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய 19 பேரையும், அவர்களின் பாடல்களையும் 2வது தொகுப்பில் ஆவணப்படுத்திவிட்டு, இந்த 3ம் தொகுதியை நூலாசிரியர் தந்து உள்ளார்.

இதில் எம்.ஜி.வல்லபன் தொடங்கி யுகபாரதி வரையில் 21 திரைப்பட பாடலாசிரியர்களின் வாழக்கைச்சுருக்கம், படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. திரைப்படத்துறைக்கு அப்பால் இருந்து ஒருவர், அதுவும் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஒருவர் திரைப்பட பாடலாசிரியர்களின் படைப்புகளை நேர்த்தியாக ஆவணப்படுத்தி இருப்பது சிறப்புக்கு உரியது.

நன்றி: தினத்தந்தி.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *