சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள்

சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 370ரூ.

குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி பெண்கள், மூத்த குடிமக்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு தமிழக அரசு நிறைவேற்றி வருகிற சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கான வழிமுறைகள் எளிய முறையில் தெளிவாக தரப்பட்டு உள்ளது.

சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளின் முகவரி, தொலைபேசி எண்கள் வரை தந்திருப்பது சிறப்பு. பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிற பெண்கள் எந்தெந்த சட்டங்களின் கீழ் வழக்கு தொடரா முடியும். அந்த குற்றங்களுக்கான தண்டனை என்ன, நீதிமன்றங்கள் எங்கே அமைந்து இருக்கின்றன என்பதுவரையில் அனைத்து தகவல்களையும் நூலாசிரியர் தொகுத்து அளித்திருக்கிறார்.

அனைத்து தரப்பினரும் வாங்கி, வாசித்து பலன் பெறலாம்.

நன்றி: தினத்தந்தி.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.