உச்சியிலிருந்து தொடங்கு
உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ.
வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வெற்றியும் தோல்வியும், மகிழ்ச்சியும் துன்பமும், வரவும் இழப்பும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. ஏற்ற இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை எண்ணத்தை தேடிச் செல்வோரை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த நூல் இது.
தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அதற்கு உளவியல், குடும்ப, சமூக காரணங்கள் என்ன?, அதில் இருந்து முண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்.
நியாயமான ஆசை, உழைப்பிற்கேற்ற எதிர்பார்ப்பு, அன்பான குடும்பம், எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் தற்கொலை எண்ணங்களை தடுத்து வளமான வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியும் என்று முத்தாய்ப்பாய் சொல்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026648.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818