உனக்கும் ஓர் இடம் உண்டு
உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ.
தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார்.
வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் அனுபவங்களை உள்ளடக்கிய இந்த புத்தகம், படிக்க படிக்க சுவாரசியம் நிறைந்ததாக உள்ளது. ஒரு முறை படிக்க துவங்கினால், புத்தகம் முழுவதையும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அனுபவத்தை தரும் என்றால் அது மிகையல்ல.
நன்றி: தினமலர், 4/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027314.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818