தாமஸ் பெய்னின் பொது அறிவு
தாமஸ் பெய்னின் பொது அறிவு, மொழியாக்கம் மருத்துவர் ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, பக். 64, விலை 50ரூ.
அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால். மன்னர் ஆட்சியில் எழுதப்பட்டது.
தற்போதைய மக்களாட்சிக்கும் பொருந்துகிறது. இதை தமிழில் அழகாக மொழியாக்கம் செய்துள்ளார், மருத்துவர். ஜீவானந்தம்.
அமெரிக்காவில், 240 ஆண்டுகளுக்கு முன் இருந்த மன்னராட்சி முறை, அரசியல் சாசனம், காலனி ஆதிக்கம் போன்றவை குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
இன்றைய மக்களாட்சிக்கும் இது பொருந்தும் என்பதே நிதர்சனம்.
அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், அறிவியல் பூர்வமாக செயல்படாமல், நம் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
நன்றி: தினமலர், 18/11/18
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818