கால் பட்டு உடைந்தது வானம்
கால் பட்டு உடைந்தது வானம், எஸ்தர், போதிவனம் பதிப்பகம், விலை 120ரூ.
உணர்விழைகளால் நூற்கப்பட்டவை
இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் நட்சத்திரமும் தேனீரும் குடையும் ஜன்னலும் நம்மிடம் பேசுகின்றன. எந்த வார்த்தைகளிலும் போலி இல்லை. கவிதைக்கு உண்மையே அழகு என்பதை அழுந்தச் சொல்கின்றன. கால் பட்டு உடைந்தது வானம் மட்டுமல்ல, வாசகனின் மனமும்தான்.
– பா.அசோக்
நன்றி: தி இந்து, 13/10/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027258.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818