தீயில் எரிந்த உண்மைகள்
தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ.
முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார்.
மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை லட்சியமாக கொள்கிறார். சினிமா நடிகை ஆகும் ஆசையில் வீட்டை விட்டு ஓடியது, அதனால் பல இன்னல்களுக்கு ஆளாகிறாள் ரேவதி.
மூவரின் லட்சியமும் நிறைவேறியதா? அல்லது வெறும் பகல் கனவாக கலைந்ததா? என்பதை விறுவிறுப்புடனும், மிக சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த நாவலை படிக்கிறபோது ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை தருகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027266.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818