புதுவெள்ளம்
புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ.
இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல்.
1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். விவசாய குடும்பத்தில் பிறந்து ரிக்ஷா இழுப்பவனாகவும், வியாபாரியாகவும் இறுதியில் சுரங்க தொழிலாளியாகவும் மாறும் கதை நாயகனின் நிலை சமூக ஏற்றத்தாழ்வுகளை கண்முன் காட்டுகிறது. வாசகர்களின் சிந்தையை கவரும் வகையில் சிறந்த நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000003711.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818