முரசுப் பறையர்
முரசுப் பறையர், தி.சுப்பிரமணியன், அடையாளம் பதிப்பகம், விலை 150ரூ.
கர்நாடக தலித்துகளின் வரலாறு

தமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.சுப்பிரமணியன் பல்வேறு அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர். தொல்லியல் சார்ந்த பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது புதிய நூல் ‘முரசுப் பறையர்’. தமிழக சாதிய அமைப்புகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அண்டை பிராந்தியங்களின் சாதிகளும் இணைந்திருக்கின்றன. இப்படிப் பிணைப்பு கொண்ட சமூகம் பற்றிய இனவரைவியலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலில், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு வந்துசேர்ந்த தலித்துகளின் வரலாறு, பண்பாடுகள் போன்றவற்றை விவரிக்கிறார். முரசு நாடு குறித்து களஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு புதிய உரையாடலுக்கு வித்திடுகிறது.
– ரா.பாரதி
நன்றி: தி இந்து, 3/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027308.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818