விடை தேடும் வினாக்கள்
விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ.
அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் இந்த கருத்துகளைத் தந்து இருப்பது, இந்தப் புத்தகம் முழுவதையும் சுவாரசியம் குறையாமல் படிக்க உதவுகிறது.
இறுதிப் பகுதியாக தத்துவ ஞானிகள் பலரது வாழ்க்கைக் குறிப்பு, மனதைக் கவரும் இலக்கியங்கள், திரையுலகம் மற்றும் மனதை ஆட்கொண்ட திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு, இந்த நூலை மேலும் ஜனரஞ்சகமாக ஆக்கி இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 24/4/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029430.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818