சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும்
சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 330ரூ.
பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பான பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினையை சமநிலையில் இருந்து நோக்கும் வகையிலான தகவல் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அய்யப்பனின் விரிவான வரலாறு, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரதம், கோவிலில் விரைவான தரிசனத்திற்கும் தங்கும் வசதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வத எப்படி என்ற தகவல், கோவிலுக்குச் செல்வதற்கான வழிகள், தமிழகத்தில் உள்ள அய்யப்பன் கோவில்கள் பற்றிய செய்திகள் போன்ற பயனுள்ள பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.
சபரிமலை கோவில் நடை எல்லா நாட்களிலும் திறக்கப்படாதது ஏன்? சபரிமலையில் அய்யப்பன் மட்டும் தான் இருக்கிறாரா? பெண்கள் வராவிட்டாலும் அய்யப்பனின் முதல் தரிசனம் அவர்களுக்குத் தான் என்பது போன்ற பல தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள், அய்யப்ப பக்தர்கள் மட்டும் இன்றி அனைவருக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 24/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818