என்றும் எம்.ஜி.ஆர்.
என்றும் எம்.ஜி.ஆர்., புவனகிரி செயபாலன், விஜய் பதிப்பகம், விலை 200ரூ.
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை பற்றியும் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றில் இல்லாத பல புதிய செய்திகளை இந்த நூல் தருகிறது.
எம்.ஜி.ஆருடன் பேசிப் பழகி, அவரது உணர்வுகளோடு ஒன்றி, அவரது வழி நடக்கும் 15 பேர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம், எம்.ஜி.ஆர். தொடர்பான வியப்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகச் சாதாரண நிலையில் இருந்த மு.கற்பகவிநாயகம், நீதிபதியாக உயருவதற்கு எம்.ஜி.ஆர். எந்த அளவு வழிகாட்டியாக இருந்தார் என்பதைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது.
மேலும் ஜே.சி.டி.பிரபாகர், தமிழ் மகன் உசேன், இதயக்கனி விஜயன் போன்றவர்கள் தரும் தகவல்கள் மூலமும் எம்.ஜி.ஆரின் பன்முகத் தன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 8/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818