தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர்.சினீவாசன் வெளியீடு, விலை 200ரூ.

ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்துகொண்டே, சின்னத்திரை, வெள்ளித்திரை, நாடக மேடை ஆகியவற்றில் நடிகராக இருந்து பிரபலமான ஏ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.சீனிவாசன், கலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றியும், அவர்களுடன் பழகிய 50 ஆண்டுகால அனுபவங்களையும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற பலருடன் கொண்டு இருந்த நட்பின்போது நடைபெற்ற ருசிகரமான நிகழ்வுகளை அவர் வெளியிட்டு இருக்கும் விதமும், கலைத்துறையில் சிலர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை அவர் தந்து இருப்பதும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளன.

நூலின் இறுதிப் பகுதியில் தேன்துளிகள் என்ற தலைப்பில், அந்தக் காலத்து கலைஞர்கள் பற்றி அவர் கூறி இருக்கும் ஆச்சரியமான தகவல்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். அரிய புதைப்படங்களை இதில் இணைத்து இரக்கும் ஏ.ஆர்.எஸ். அந்தப் படங்களுக்கான கீழ் வசனமும் கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

நன்றி: தினத்தந்தி, 8/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.