அணிந்துரை அணிவகுப்பு
அணிந்துரை அணிவகுப்பு, இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 150ரூ.
ஆன்மிகம், கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை என்பது போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வெளியான நூல்களில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தராதரத்தைப் பார்த்து மெச்சுவது போல, ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கி அவற்றையே தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கும் முயற்சி புதுமையானதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.
ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான மேற்கோள்களைப் பிற நூல்களில் இருந்தும் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்தும் தேடிப்பிடித்து அவற்றைப் பொருத்தமாக வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த அணிந்துரை அனைத்தும், அந்த 30 நூல்களின் மதிப்புரை என்ற அளவில் நின்றுவிடாமல் அந்த நூல்களை முற்றிலும் அலசி ஆராயும் நோக்கில் விரிவான கட்டுரைத் தொகுப்பாக அமைந்து இருக்கிறது.
இந்த நூலைப் படிப்பதன் மூலம், அணிந்துரை வழங்கப்பட்ட 30 நூல்களையும் ஒரே நேரத்தில் படித்த திருப்தி ஏற்படும் என்பதே இந்த நூலின் வெற்றிக்கு அளவுகோலாகும்.
நன்றி: தினத்தந்தி, 8/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818