வேளாண் காதலர் வெங்கடபதி
வேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ.

வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி.
கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி இருக்கிறது. பக்கம் 69ல், கனகாம்பரம் என்ற சொல்லிற்கு இவர் தரும் விளக்கமே அலாதியானது. கனகம் என்றால் பொன், அம்பரம் என்றால் ஆகாயம். கனகாம்பர மலர் சாகுபடியால், வான் உயரத்திற்கு வாழ்க்கையை உயர்த்தும் என்கிறார்.
புதிய முறையில் சவுக்கு மற்றும் கொய்யா சாகுபடி, மற்றும் பல கண்டுபிடிப்புகள் இவரது சாதனை. நுாலில் காணப்படும் நிழற்படங்கள் நுாலின் சிறப்பை மேலும் கூட்டுகின்றன.
– பேராசிரியர் இரா.நாராயணன்
நன்றி: தினமலர், 12/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027044.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818