திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி
திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ.
தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது.
கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் கால வரிசைப்படி, முதல் தொகுதியான இந்த நூலில் தொகுத்துத் தந்து இருக்கிறார் ஆசிரியர். அத்துடன் கவிஞர் வாலி பாடல் எழுதிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், அந்தப் படங்களில் இடம்பெற்ற முக்கிய நடிகர், நடிகைகள், அந்தப் பாடல்களைப் பாடிய பாடகர்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் சேர்த்துத் தந்து இருப்பது பாராட்டத்தக்கது.
மேலும் அந்தப் பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தில் நடைபெற்ற ருசிகர சம்பவங்களும் இதில் காணப்படுகின்றன. கவிஞர் வாலியின் 22 ஆண்டுகாலதிரைப்படப் பாடல்களின் நல்ல ஆவணமாக விளங்கும் இந்த நூல் அனைத்து தரப்பினரையும் கவரும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818