கங்காபுரம்
கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ.

சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது.
தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த உணர்ச்சிகளையும் சுற்றி நாவல் நகர்ந்து செல்கிறது. அப்போதைய மக்களின் வாழ்க்கை நடைமுறை, திருவிழாக்கள், மன்னரின் அன்றாட செயல்பாடுகள், அவரது வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள், அந்தக் காலத்து ஆடை அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் அப்படியே நமது மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல நாவலின் ஒவ்வொரு பக்கமும் அமைந்து இருக்கிறது.
மன்னர் ராஜராஜன் எவ்வாறு இறந்தார் என்ற வரலாற்று ஐயப்பாடு நீடிக்கும் நிலையில், அவரது இறுதி நிமிடங்கள் என்று நாவலில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் நெஞ்சைத் தொடுகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலைவிட பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற மன்னர் ராஜேந்திரனின் உள்ளத்து வேட்கையும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
நன்றி : தினத்தந்தி, 24/7/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027749.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818