சங்கீத நினைவலைகள்
சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெரல் பப்ளிஷர்ஸ், பக். 220, விலை 140ரூ.
ஓய்வு பெற வங்கி அதிகாரியான இந்நூலாசிரியர், சிறுகதைகள், நாடகம், பேட்டிகள், சமூகப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகள் என்று பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதோடு, அவற்றை தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இசையை பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதிய இரண்டாவது நூல் இது.
கர்நாடக இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன என்றும், அவற்றை எல்லாம் முழுமையாக அறியும் இசை ஞானம் தனக்கு இல்லை என்றும் எழுதியுள்ளது எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது. எனினும் அடக்கத்தோடே இந்நூலில் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள இசை ஆய்வறிஞர் பி.எம்.சுந்தரம் கூறியுள்ளது சரியே என்று, இந்நூலைப் படிக்கும்போது தோன்றுகிறது. இந்நூலில் ராகம் கண்டுபிடிப்பது எப்படி என்று தொடங்கி, பிற பிரபல வாக்கேயக்காரர்கள் என்பது வரை 27 அத்தியாயத்தில் கல்கி முதல் சுப்புடு வரை அவர்களின் விமர்சனப் பாணியை இந்நூலாசிரியர் விளக்கியுள்ளது.
இசைப்பிரியர்களை ஈர்க்கக்கூடியது. அதேபோல் கர்நாடக இசை வித்வான்களான மதுரை மணி, செம்மங்குடி சாமி, சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா போன்றவர்களைப் பற்றியும் அவர்களின் இசை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவர்களின் இசை நிகழ்ச்சிகளைப் பற்றியும் விவரித்துள்ளதும் சிறப்பாக உள்ளது. அதேபோல் கவிஞர் வைரமுத்துவின் ஆதங்கம், குப்பத்தில் கர்நாடக இசை, ஒரு டீச்சரின் அனுபவம். இவர்கள் சந்தித்தால், இசை சொல்லும் செய்தி என்று இந்நூலிலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் இசை ரஸிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 18/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818