மணல் உரையாடல்
மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ.
பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால்
“கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன்
நெடுநேரமாக
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்குகையில்
“யாரும்மா… இவங்க…?”
என்கிறாள்
மழலை மொழியில்
“என் மகள்’‘
– எனக் குழந்தை மொழியில் சொல்லிவிடுகிறார் கவிஞர். தமிழ்ச் சமூகத்தின் வாழ்வில் நகர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பொருளாதாரத் தேக்கத்தின் தீர்வாக புலம்பெயர்ந்து உழைக்கும் நிலையை மிகச் சாதாரணமாக எதிர்கொள்ளும் எளிய மக்களின் குரலாக இத்தொகுப்பின் கவிதைகள் பேசுகின்றன.
பணியாளர்களின் வயிற்றெரிச்சலில் அரங்கேறும் முதலாளிகளின் “வள்ளல் தன்மை” எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான “தேச ஒற்றுமையாக” இருப்பது போன்ற உழைப்பின் வர்க்கபேத நிலைகளையும் எளிமையான கவிதைகளாக்கியிருக்கிறார். வெளிநாடு சென்றவனின் மாடி வீட்டைக் கண்டு பெருமூச்சு விட்டவர்களின் இதயம் பெருவலியை சுமக்கச்செய்யும் வகையில் உண்மையும் இயல்பும் கலந்த கவிதைகளால் இந்நூல் பின்னப்பட்டிருக்கிறது.
நன்றி: அந்திமழை, 1/10/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029888_
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818