மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், கவிதைகள், அமிர்தம் சூர்யா, அன்னை ராஜராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, விலை 100ரூ. நீந்தும் சொற்கள் பழைய சோறென இருக்கும் என் வாழ்வுக்கு இன்னமும் அவள்தான் நினைவில் ஊறிய இழப்பின் மாவடு… இந்த கவிதை உருவாக்கும் மனச்சித்திரங்கள்தான் இக்கவிதையின் வெற்றி. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என்கிற இந்த கவிதைத் தொகுப்பில் கவிதைகளாக முழுமை அடைந்துள்ள ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களான கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுகின்றன. […]

Read more