மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ. வசந்தகுமரன், தமிழ் அலை, பக். 144, விலை 100ரூ. வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நூல். அழகியலை, மிக எளிய நடையில் சின்ன சின்ன கவிதைகளாகப் படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், ‘நச்’ என்று பதிய வைக்கின்றன சில. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள். ‘ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை ஓய்வதில்லை நதி…’ என்கிறது ஒரு கவிதை. இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more

மானுடக் குரல்

மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-3.html தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.   —- தஞ்சை […]

Read more