கலைஞர் என்னும் மனிதர்
கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், விலைரூ.500.
எழுத்து, நடிப்பு, ஆட்சி, கட்சியை வழிநடத்துதல் என பன்முகத் திறன்களால் மிளிர்ந்து வரலாற்றில் நிலைத்தவர் கருணாநிதி. ஆளுமை நிறைந்த மனிதர். உயர்த்தும் பண்புகளை, அவர் வளர்த்து கொண்ட விதம் பற்றி சித்தரிக்கும் நுால். வண்ணப் படங்களுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பிலும், கட்சியிலும் சந்தித்த நெருக்கடிகளை சமாளித்த காலங்களில் இதழ்களுக்கு அளித்த பேட்டிகள், முக்கிய பிரமுகர்களுடனான உரையாடல், சந்திப்புகளில் சொன்ன தகவல்கள், எழுதிய பத்திகள் மற்றும் கட்டுரைகளால் நிரம்பியுள்ளது.
இந்த நுாலை ஆக்கியிருப்பவர் மணா; பிரபல பத்திரிகையாளர். முக்கிய காலக்கட்டங்களில் அவர் எடுத்த பேட்டிகள் பொருத்தமாக இடம்பெற்றுள்ளன. சிக்கலான நேரங்களில், தீர்க்கமான முடிவுகளை எடுத்த திறனை வெளிப்படுத்துகின்றன.
குடும்ப செயல்பாடு பற்றிய உணர்வுப்பூர்வமான ஆக்கங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவை, முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி போன்ற குடும்ப உறுப்பினர்களால் உரிய காலங்களில் பதிவு செய்யப்பட்டவை. கட்சியில் செயல்பாடு, முக்கிய பிரமுகர்களின் படைப்புகள் வழியாக வெளிப்பட்டுள்ளது.
பின்தள்ளப்பட்டக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், அயராத உழைப்பு, நம்பிக்கையான செயல்பாடு, விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல், கூர்ந்து நோக்குதல், ஆழ்ந்து சிந்தித்தல் போன்ற பண்புகள் வாயிலாக, சமூகத்தில் உயர்ந்து வரலாற்றில் நிலைத்துள்ளதை பதிவு செய்துள்ள நுால்.
– மலர் அமுதன்
நன்றி: 22/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818