கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு
கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு, பா.கண்ணன், அகலன் வெளியீடு, விலைரூ.100.
கம்பளத்து நாயக்கர்கள் இனவரைவியல் குறித்துப் பேசும் நுால். கம்பளத்தார் வரலாறு, வாழ்வியல் சடங்குகள், மரபு மாறாத திருமண சடங்குகளை விரிவாக ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வாழும் வேகிளியார் என்ற கம்பளத்து நாயக்க மக்களின் சமுதாய வாழ்வியலைத் தக்க சான்றுகளுடன் பேசுகிறது.
தமிழகத்துக்கு வந்து குடியேறிய அந்த மக்களின் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வாழ்வில் நிகழும் பிறப்பு, காதணி, பூப்பு, இறப்புச் சடங்குகள் குறித்தும் பேசுகிறது.
மணவிழா சடங்குகளில் மரபு மாறாமல் திகழ்வது குறித்தும் விளக்குகிறது. நவீனத்துவத்தின் விளைவாக நேர்ந்துள்ள மாற்றங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 21-2-21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818