மருத்துவ மன்னர்கள்
மருத்துவ மன்னர்கள், ஹெலன் கிலேப்ப சேட்டில், தமிழில் அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை ரூ.160.
மருத்துவத் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் மேயோ குடும்பத்தினர் குறித்து எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியான இந்நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.
18-ஆம் நூற்றாண்டில் டாக்டர் வில்லியம் வாரல் மேயோவும், அவரது மகன்களான டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் மேயோ மற்றும் சார்லஸ் ஹொரே மேயோவும் கட்டமைத்த மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தின் கதைதான் இந்நூல்.
ஒரு மருத்துவக் குடும்பத்தின் சரிதத்தைக் கூறுவதுடன் நில்லாமல் அதனூடே அக்கால சரித்திரத்தையும் பதிவு செய்திருப்பதுதான் நூலின் தனிச் சிறப்பு.
அந்த காலகட்டத்தில் ஸ்டெதஸ்கோப், தெர்மோமீட்டர் போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்கள் கூட ஆச்சரியமான பொருள்களாக இருந்ததை இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது. எந்த விதமான வசதிகளும் இன்றி கொள்ளை நோய்களில் இருந்து மக்களை டாக்டர் மேயோ குடும்பத்தினர் காப்பாற்றிய சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அக்காலத்தில், அறுவை சிகிச்சைகளை துணிந்து மேற்கொண்டு டாக்டர் மேயோ குடும்பத்தினர் அதில் வெற்றி அடைந்துள்ளனர்.<br>
அனுபவத்துக்கும், அனுமானத்துக்கும் இடையில் நின்று உயிர்களை காப்பாற்றப் போராடிய மருத்துவர்களின் நிலையைக் காட்டும் காலக் கண்ணாடி இந்நூல்.
நன்றி: தினமணி, 13/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818