என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300
வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால்.
உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார்.
தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை விவரிக்கிறார். நாடுகள், அங்குள்ள அரசியல், கலாசாரம், இந்தியாவுடனான உறவுகள் குறித்து அறிய முடியும்.
பிரபலங்களை சந்தித்த அனுபவங்கள், அவர்களின் மனங்கள் எப்படியானவை என்பதை படம் பிடித்து காட்டுகிறார். ஆசிரியரின் உரையாடலை கேட்டவர்களுக்கு, அதன் வாசனை இந்நுாலிலும் தென்படும்.
– டி.எஸ்.ராயன்
நன்றி: தினமலர், 19/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818