மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!, ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.90
ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த ஆணவக் கொலைகளை பட்டியல் இட்டு ரத்தக் கண்ணீர் வர வைக்கிறார்.
ஆணவக் கொலை செய்ய நினைக்கும் ஒருவரின் மனதை மாற்ற, பத்திரிகையாளர் முயற்சி எடுக்கிறார். ஆணவக் கொலை செய்து, துாக்குத் தண்டனைக்கு காத்திருக்கும் கைதியை சந்திக்க வைக்கிறார். அந்த கைதி ஆணவக் கொலையின் கேடுகளை விளக்க, மனம் மாறி இளம் ஜோடிக்கு மகிழ்வுடன் மணம் முடிக்க விழைகிறார். ஜாதி திமிர் செத்து மடிகிறது. உள்ளத்தை உருக்கும் நாவல்.
– எஸ்.குரு
நன்றி: தினமலர், 14/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818