நதியின் கடவுள்
நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்) , ரெவ்.ஜான் மேக்காவன், தமிழில்: திருமலை சோமு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.200 , விலை ரூ.235.

சீன வானொலியில் “கதைத்தேன்’ என்ற தமிழ் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சீன நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பே இந்நூல். துறவி, நகரத்தின் கடவுள், நதியின் கடவுள், அழகு மகள், விதவை, கன்பூசியசின் பழங்கதை என்பன உள்ளிட்ட 15 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன.
சீனாவில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தெய்வ நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றவை நமது நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே சீன நாட்டுப்புறக் கதைகளிலும் அமைந்திருக்கின்றன.
சீனர்களும் இந்தியர்களைப் போன்று பல்வேறு கலாசாரப் பின்னணி கொண்டவர்கள். அவர்களின் நம்பிக்கைகளும், வாழ்வியல் முறைகளும் பண்பாட்டுரீதியாக இந்தியப் பண்பாட்டுடன் பல்வேறு ஒற்றுமைகளுடன் இருப்பதை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள சீன நாட்டுப்புறக் கதைகளின் மூலம் அறிய முடிகிறது.
குறிப்பாக, “அழகு மகள்’ கதையில் வரும் பெண்ணின் முற்பிறவி காதலன் மறுபிறப்பில் வந்து இணைவது, காதலின் புனிதத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.
தண்ணீர் பேய், பழி வாங்கும் கடவுள், மர்ம அங்கி, மிருகங்களின் குகை ஆகிய கதைகளும் சுவாரசியமாக அமைந்து, மீண்டும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
சீன தேசத்தின் பல்வேறு மனிதர்களின் புகைப்படங்களும், அழகிய பெண்களின் வெவ்வேறு வகையான ஒப்பனை முகங்களும் கதைகளுக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டிருக்கின்றன. பிற நாட்டுக் கதைகளை விரும்பிப் படிப்போருக்கு இந்நூல் சிறந்த அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818