பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம், ஆவணப்படுத்தியவர்: பகவான்தாஸ் படேல், ஹிந்தியில்: மிருதுளா பாரிக், தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்திய அகாதெமி, பக்.240, விலை ரூ.270.
தெற்கு குஜராத், இராஜஸ்தானின் கேட் பிரம்மா தாலுகாவில் டூங்கிரி பீலர் என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பீலர்களின் எழுத்து வடிவமற்ற மொழி பீலி. அம்மொழியில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடப் பெற்ற மகாபாரதக் கதையின் தமிழ் மொழியாக்கமே இந்நூல்.
சாந்தனுவுக்கும் கங்கைக்கும் ஏற்பட்ட பிணைப்பில் தொடங்கும் இந்நூல், குருஷேத்திர போருக்குப் பிறகான கலியுகத்தின் ஆரம்பம், அதையொட்டி பாண்டவர்கள் இமயமலை செல்வது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
தான் ஆட்சி புரிவதற்கு வசதியாக கண்டங்களைப் பங்கு பிரிக்குமாறு துரியோதனன் கிருஷ்ணரிடம் வேண்டுகிறான். அவ்வேண்டுகோளுக்கு இணங்க பங்கு பிரிக்கும்போது, பாண்டவர்களுக்கு அதிகமாகவும், கெளரவர்களுக்கு குறைவாகவும் பங்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டி துரியோதனன் பாண்டவர்களைப் போருக்கு அழைப்பதாக “பீலர்களின் பாரதம்’ கூறுகிறது. இதுபோன்று, இந்நூல் விவரிக்கும் மகாபாரதத்தின் பல்வேறு நிகழ்வுகள் வழக்கமான பாரதக் கதையைப் போலல்லாமல் பீலர் இனத்தின் சமூக வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
கண்ணன், சாந்தனு, கங்கை, குந்தி, காந்தாரி, பீஷ்மர், தருமன், கர்ணன், அர்ச்சுனன், திரெளபதி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களை பழங்குடியின மக்களின் வாய்மொழிப் பாடல்கள் வழியே அறியும்போது மகாபாரதம் குறித்த ஒரு புதிய புரிதல் ஏற்படுகிறது.
இந்தியக் கலாசாரம், பண்பாட்டின் முழு பரிமாணத்தையும் உணர்ந்துகொள்ள பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்களையும் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு இந்நூல் உதவுகிறது.
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%80%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818