மலையாளக்கரையினில் இஸ்லாம்

மலையாளக்கரையினில் இஸ்லாம், செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், விலைரூ.200

கேரளாவில் இஸ்லாம் காலுான்றியதை வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

எண்ண அலைகளில் துவங்கி, கடல், பழந்தமிழர் வாணிபமும் பன்னாட்டு தொடர்பும், அரேபியா, அரேபியரின் வணிகம், குதிரை, இஸ்லாம், சந்திரன், சேரமான் பெருமாள் இயல்களின் கீழ் தகவல்கள் உள்ளன.

முதல் இயலில், தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய தகவல் வரலாறு மற்றும் சங்க கால இலக்கிய பின்னணியுடன் அலசித் தரப்பட்டுள்ளது. அடுத்து கடல் பற்றிய குறிப்புகளும், இலக்கிய பின்னணி மற்றும் உரிய தரவுகளுடன் தரப்பட்டுள்ளது. ஆய்வுப் பூர்வமான தகவல்கள் அடங்கிய நுால்.

– பாவெல்

நன்றி: தினமலர், 16/1/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *