நெடுமர நிழல் கதைகள்
நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், எழுத்து பிரசுரம், விலைரூ.200

காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக அலசுகிறது. பொருள் ஆர்வத்தில் ஆடும் மன ஊஞ்சல்களை கண் முன் நிறுத்துகிறது.
இந்த தொகுப்பு, 24 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பல சூழ்நிலைகளில் வாழும் மனிதர் மனதில் மிளிரும் வண்ணங்களை குழைத்து, வினோதமாக கண்ணில் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் இயல்பாக கலக்கின்றன.
அவை காட்சி மயமாகி சிந்தனையில் நுழைகின்றன; ஸ்தம்பிக்க வைக்கின்றன. மன வக்கிரங்களின் கோணங்களை முகத்தில் அறைகின்றன; யதார்த்த உலகத்தை கண் முன் விரிக்கின்றன.
பாத்திரங்கள் வெளிப்படுத்தும் நுட்பமான உரையாடல் சிந்தனைக்கான களத்தை அமைக்கிறது. மிகவும் சிறிய சிறுகதை, சில விஷயங்கள் என்ற தலைப்பில் பதிவாகியுள்ளது. கலகம் விளைவிக்கும் கதைகளின் தொகுப்பு நுால்.
– அமுதன்
நன்றி: தினமலர், 16/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818