ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி
ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம்,பக்.300, விலைரூ.300.
விஜிபி குழுமத் தலைவரான வி.ஜி.சந்தோஷத்தின் 85 – ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டின் குடியரசுத்தலைவர், மாநில முதல்வர், துணைநிலை ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள், நீதியரசர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர் சங்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் வாழ்த்துகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
“இவர் மனிதரல்ல. மிக நல்ல மனிதர்.உலகமே போற்றும் மாமனிதர். எம்மதமும் சம்மதம் எனச் செயலில் காட்டிவரும் புனிதர். அடக்கத்தை அணிகலன்களாகக் கொண்டு இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் ‘ என்பன போன்ற புகழ்மாலைகள் மட்டுமல்ல, அவருடன் பழகும்போது கிடைத்த அனுபவப் பகிர்வுகளும் இந்நூலில் உள்ளன.அவற்றிலிருந்து வி.ஜி.சந்தோஷம் என்கிற மாமனிதர், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 6/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818