அகமுகம்
அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ.
உள்ளத்தின் உரையாடல்கள்
கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும்
மதியக் காகங்கள்
எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன
இந்நாளைய பொழுதுக்கு
-இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’.
கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன.
அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த மரத்தை அழியாத மொழியில் நிறுத்தியிருக்கிறது.
உடல் முழுக்க கனிந்த பழங்களைக் கொண்ட அம்மரத்தைப் பற்றி
காற்றின் கரங்களில் பதியாத ஓவியத்தை
வரையும் அந்த அத்திமரம்
-என்று வாசிக்கையில் ஒருகணம் காலம் நின்றுபோகிறது.
நன்றி: அந்திழை, ஜுலை 2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027057.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818